கோபத்தின் விளைவுகள் - Story
ஒரு இளைஞன் அதிகமாக கோபங் கொள்பவனாய் இருந்தான். எதற்கெடுத்தாலும் பட்டென கோபங் கொள்வான்.
ஒரு நாள் அவன் அப்பா அவனிடம் ஓர் சுத்தியலும் நிறைய ஆணிகளையும் கொடுத்து "இனிமேல் உனக்கு கோபம்வரும் போது எல்லாம் வீட்டின் பின்னால் உள்ள ஓர் காய்ந்த மரத்தில் ஆணி அடிக்குமாறு கூறினார்”.
முதல்நாள் பத்து ஆணி மறுநாள் ஏழு, பின்பு ஐந்து , இரண்டு என படிப்படியாக ஆணி குறைந்து கொண்டே சென்றது.
ஒரு நாள் ஒரே ஒரு ஆணி தான் அடித்தான் மற்றொரு நாள் எவ்வித ஆணியும் அடிக்கவில்லை. மொத்தமாக ஐம்பது ஆணிகள் வரை அடித்து இருந்தது. அவன் தன் அப்பாவிடம் "இனி கோபம் எனக்கு வராது எனகூறினான்".
இனிமேல் கோபம் வராத நாளில் நீ ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடு என்றார்.
சம்மதித்து கொண்டு சென்ற மகன் ஓர்நாள் தனது தந்தையிடம் "ஐம்பது அடித்த ஆணிகளும் பிடுங்கப்பட்டு விட்டன" என பெருமையுடன் அப்பாவை அழைத்து காட்டினான்.
உடனே அப்பா சொன்னார்; ஆணிகளை பிடுங்கிவிட்டாய் மரத்தில் உள்ள ஓட்டைகளை என்ன செய்வாய்?
உன் கோபம் இது போல பலரை காயப்படுத்தி இருக்கும் அல்லவா?
கருத்து- கோபத்தின் விளைவுகள் பெரிதாக இருக்கும்.. தழும்புகள் மறைவது சில வேளை கடினமாக கூட இருக்கலாம்.
எபேசியர் 4:26 -
நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது
Comments
Post a Comment