விலையேறப்பெற்ற இரட்சிப்பு - Story





ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான். அதன் மதிப்பு என்ன வென்று தெரியாமலே அதை தன்னுடன்இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான்.

அதை கண்கானித்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி அவனிடம்சென்று இந்த கல்லை எனக்குக் கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன்; எவ்வளவு வேண்டும் கேள் என்றான்.

உடனே பிச்சைக்காரன் "அப்படி யானால் நூறு ரூபாய் தந்து விட்டு இந்தக் கல்லை வைத்துக் கொள்" என்றான். அதற்கு வைர வியாபாரி இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன்  "நூறு ரூபாய் அதிகம்! நான் உனக்கு ஐம்பது ரூபாய் தருகிறேன். இல்லை என்றால் வேண்டாம்" என்றான். 

பிச்சைக்காரன் "அப்படியானால் பரவாயில்லை, அது இந்த கழுதையின் காதிலே இருக்கட்டும்” என்றவாறே நடக்கலானான்.

தப்பி ஓடிய யானை - Story

வைர வியாபாரி எப்படியும் அவன் தன்னிடம் அதை ஐம்பது ரூபாய்க்கு தந்துவிடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான்.

அதற்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி அந்த பிச்சைக்காரனிடம் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து அந்த வைரத்தை வாங்கிக் கொண்டான்.

இதை சற்றும் எதிர்பாராத முதல் வைரவியாபாரி அதிர்ச்சியுடன் "அட அடிமுட்டாளே கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் பத்தாயிரத்துக்கு கொடுத்துவிட்டு இவ்வளவு சந்தோசமாக செல்கிறாயே! நன்றாக ஏமாந்துவிட்டாய்" என்றான்.

அதைகேட்ட பிச்சைக்காரன் பலத்த சிரிப்புடன் யார் முட்டாள்? எனக்கு அதன் மதிப்புத் தெரியாது அதனால் அதை இந்த விலைக்கு விற்று விட்டேன்; மேலும் எனக்கு இதுவே மிகப் பெரிய தொகை. எனவே நான் மிகுந்த மகிழ்வுடன் இருக்கிறேன் 

ஆனால் அதன் மதிப்புத் தெரிந்தும் வெறும் ஐம்பது ரூபாவுக்காக அதை இழந்துவிட்டாய் இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்  என்றவாறே நடக்கலானான்.

இவ்வாறே நம்மில் பலர்  மிகச்சிறிய சந்தோசங்களுக்காக துணிகரமாக பாவம் செய்து பரலோக இராஜ்ஜியத்தை இழக்கவும் தயாராக இருக்கின்றோம். விலைமதிப்பற்ற இயேசுவை இழக்க துணிய வேண்டாம். 

பிலிப்பியர் 3 :12 - .......கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்.

Comments

Popular posts from this blog

ஆண்டவரும் சாத்தானும் - Jokes

பழிக்கு பழி வாங்காதிருப்பாயாக - Story