இருதயத்தையே கவனிக்கின்றார்- Story
ஓர் பலூன் வியாபாரி அழகான பல வர்ண பலூன்களை விற்பனை செய்பவன்.
அவனிடத்தில் சிவப்பு,பச்சை,மஞ்சள் நீலம், வெள்ளை ஆகிய வர்ணங்களிலும் பலூன்கள் இருந்தன. எப்பொழுதெல்லாம் வியாபாரம் குறைவு படுகிறதோ அப்போதெல்லாம் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூனை வானத்தில் பறக்க விடுவான்.
சிறுவர்கள் அதனை பார்த்ததும் தமக்கென்று ஒன்றை வாங்கி கொள்வர்.
இதனால் அவனது வியாபாரமும் மிகவும் உயர்வடைந்தது.
இச்செயலை தொடர்ந்தும் அவன் செய்து கொண்டிருந்தான்.
ஒருநாள் கடலோரத்தில் நிறைய சிறுவர்கள் நின்று விளையாடுவதை பார்த்து அங்கே சென்று தனது கைப் பையினுள் இருந்து ஏதொன்றை இழுத்தான்.
"இந்த கறுப்பு நிற பலூனை ஊதி பறக்க விட்டாலும் இது அதிக தூரம் பறக்கும்" என கூறி ஹீலிய வாயு நிரம்பிய கறுப்பு பலூனை மேலே பறக்க விட்டான்.
அப்போது அங்கிருந்த சிறு பையன் தன் தகப்பனிடம் அப்பா எனக்கு அதை வாங்கி தாங்க என்று கேட்டான்.
தகப்பன் மகனிடம்" மகனே பலூன் மேலே பறப்பது, வெளியே என்ன தோற்றம் என்பதை பொறுத்தல்ல உள்ளே என்ன இருக்கின்றது என்பதை பொறுத்தே.
கருத்து-
இதை போலவே எம் வாழ்விலும் " எம் உயர்வுகள், மேன்மைகள் வெளித் தோற்றத்தின் அடிப்படையில் அல்ல உள்ளான குணாதிசயத்தின் அடிப்படையிலேயே..
மனிதன் முகத்தை பார்க்கிறான் ஆண்டவரோ இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறார்..
தாவீதின் உயர்வு கூட அவனது இருதயத்தின் தன்மையினாலேயே.
Comments
Post a Comment