எப்படி திறமை - Jokes
இரண்டு பெண்கள் நீண்ட நேரமாக பல காரியங்களை குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென தமது கணவரை பற்றி பேச ஆரம்பித்தார்கள்.
ஒருத்தி சொன்னாள் என் கணவன் நன்றாய் சமைப்பார் அழகாக பாடுவார் வீட்டில் எல்லா வேலைகளையும் நேர்த்தியாய் தான் செய்வார் ...சரி இதை தான் விடு.....இதற்கும் மேலாய் "எந்த தலையங்கம் கொடுத்தாலும் அதைப்பற்றி ஐந்து மணித்தியாளம் பேசக்கூடியவர்.. அவ்வளவு திறமை மிக்கவர்.
உடனே மற்றவள் சொன்னாள் ஆ ஆ அது நல்லது தான் ஆனால் என் கணவன் "தலையங்கமே இல்லாமல் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவார்" என்றாளாம்.
Comments
Post a Comment