இயேசுவை விசுவாசிப்போம் - Story
ஓர் அழகான குடும்பத்தில் தகப்பன், தாய், மூன்று வயதான மகன் மற்றும் எட்டு மாத குழந்தையுமாக ஆறு மாடிகளை கொண்ட ஓர் பெரிய கட்டடத்தில் மூன்றாவது மாடியில் சந்தோசமாக வசித்து வந்தனர்.
ஒருநாள் தாய் வெளியே சென்றிருந்த சமயம் கட்டடம் திடீரென சூடாகுவதனை தகப்பனால் உணர முடிந்தது. கீழே விபரீதம் ஏதோ நடக்கின்றது என்பதை உணர்ந்த அவர் தொட்டிலில் இருந்த குழந்தையை தூக்கி கொண்டு "எனக்கு பின்னால் வா மகனே" என மகனுக்கு கட்டளையிட்டு சீக்கிரமாய் வெளியேறினான்
பின் தொடர்ந்த மகனுக்கு திடீரென தனக்கு மிகவும் பிடித்தமான ஓர் விளையாட்டு பொருள் ஞாபகம் வந்தது. அதனை எடுத்து கொண்டு வெளியே செல்வோம் என நினைத்து அறைக்குள் போய் அதனை தேடிக் கொண்டிருந்தான் ஆனால் தகப்பனோ இதனை அறியவில்லை கீழே சென்று விட்டான்.
விளையாட்டு பொருளை எடுத்து கொண்டு வெளியே வந்த பையன், இறங்கும் பாதையில் தீ பரவி விட்டதை பார்த்து "அப்பா அப்பா" என சத்தமாய் கூக்குரலிட்டான்
கீழே இருந்த தந்தை சத்தமாய் மகனே நீ எங்கள் வீட்டின் யன்னல் வழியாய் கீழே குதி என கத்தினார். மகனோ அப்பா உங்களை எனக்கு தெரியவில்லை நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்றான் மீண்டும் தகப்பன் மகனே நீ எங்கள் வீட்டின் யன்னல் வழியாய் கீழே குதி என கத்தினார்.
மகனோ மீண்டும் மீண்டும் இதனையே சொன்னான் . தீயும் அறையை அண்மித்ததினால் இறுதியில் ஒருவாறு மகன் பாய்ந்து விட்டான். கீழே தயாராய் இருந்த தந்தை அழகாக ஏந்தி கொண்டார்.
கருத்து-
ஒருவரும் ஆண்டவரை காணவில்லை ஆனால் அவர் இருக்கிறார் என விசுவாசிக்கிறோம்.
நம்புங்கள் அவரை உங்களை கடைசி வரை காப்பாற்ற அவர் வல்லவர்.
எபிரேயர் 11:1 -விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது..
Comments
Post a Comment