எதன் அடிப்படையில் எமது கிரியைகள் - Message Notes






யோவான்- 12:3  அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது.

நாம் ஆலயம் செல்கின்றோம்.... தசம பாகம் கொடுக்கின்றோம்...... பாடல் பாடுகிறோம்... ஆராதிக்கின்றோம்... காணிக்கைகள் கொடுக்கின்றோம்.. நற்கிரியைகள் செய்கின்றோம்... இன்னும் பலவும் செய்கின்றோம்.. இவை எல்லாமே நல்லது தான் ஆனால் எதனை அடிப்படையாக வைத்து ஈடுபடுகின்றோம்...

👉🏿பிரதிபலனை எதிர்பார்த்து- எமக்கு நன்மைகள், ஆசீர்வாதங்கள், சுகம், செழிப்பு, இன்னும் வசதி வாய்ப்புக்கள் பெருக வேண்டும் என்பதற்காக..
உதாரணமாக பேதுரு கேட்டான் ஆண்டவரே எல்லாவற்றையும் விட்டு உம்மை பின்பற்றுகின்றோமே எமக்கு "என்ன கிடைக்கும்".

👉🏿பெருமை புகழ்ச்சிக்காக- தமது பெயர் புகழடையனும், தமக்கு ஓர் அந்தஸ்து, கௌரவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக உதாரணமாக பரிசேயனது ஜெபம்...

👉🏿பயத்தின் நிமித்தம்- குறிப்பிட்ட ஒன்றை செய்யாவிட்டால் வியாதி, நஷ்ரம், கஸ்ரம், ஆபத்து வந்து விடும் என்பதால்..

இரட்சிப்பின் விளைவுகள் - Message Notes

👉🏿கடமையினால் - ஓர் போதகராக, விசுவாசியாக, அல்லது ஓர் குழுவில் அங்கத்துவம் வகிப்பதால்...

👉🏿மற்றவர்களது தூண்டுதலினால்- தாய் தகப்பன், போதகர், அயலகத்தினர், நண்பர்கள் போன்றோரது தூண்டுதலினால்....

👉🏿அன்பினால்- இருதயத்தில் உண்டாகிய அன்பின் நிமித்தம்...

மரியாள் ஏன் விலையேறப்பெற்ற பரிமள தைலத்தை இயேசுவின் சிரசில் வார்த்தாள்...
அன்பு ஒன்று தான்.. இதனையே நம் ஆண்டவர் எப்போதும் நம்மில் எதிர் பார்க்கின்றார்.

Comments

Popular posts from this blog

ஆண்டவரும் சாத்தானும் - Jokes

பழிக்கு பழி வாங்காதிருப்பாயாக - Story