Posts

Showing posts from July, 2017

எப்படி திறமை - Jokes

Image
இரண்டு பெண்கள் நீண்ட நேரமாக பல காரியங்களை குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென தமது கணவரை பற்றி பேச ஆரம்பித்தார்கள்.  ஒருத்தி சொன்னாள் என் கணவன் நன்றாய் சமைப்பார் அழகாக பாடுவார் வீட்டில் எல்லா வேலைகளையும் நேர்த்தியாய் தான் செய்வார் ...சரி இதை தான் விடு.....இதற்கும் மேலாய்  "எந்த தலையங்கம் கொடுத்தாலும் அதைப்பற்றி ஐந்து மணித்தியாளம் பேசக்கூடியவர்.. அவ்வளவு திறமை மிக்கவர்.  உடனே மற்றவள் சொன்னாள் ஆ ஆ அது நல்லது தான் ஆனால் என் கணவன் "தலையங்கமே இல்லாமல் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவார்" என்றாளாம்.  

வாழ்வை இயேசுவிடம் ஒப்படைப்போம் - Story

Image
சிற்பி ஒருவர் ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்த போது ஒரு கடையருகே கனத்த, பெரிய பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார்.  ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், 'ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா?' என்று  கேட்டார். தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள்.  இது  இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்! என்றார் கடைக்காரர்.  பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி, அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான சிலை ஒன்றை உருவாக்கினார். அந்த  சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது. போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டனர். அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர்.  முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார். அந்த சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர், 'இந்த அற்புதமான சிலைக்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்?'… என்று கேட்டார்.  அதற்கு  சிற்பி, 'வே...

இருதயத்தையே கவனிக்கின்றார்- Story

Image
ஓர் பலூன் வியாபாரி அழகான பல வர்ண பலூன்களை விற்பனை செய்பவன். அவனிடத்தில் சிவப்பு,பச்சை,மஞ்சள் நீலம், வெள்ளை ஆகிய வர்ணங்களிலும் பலூன்கள் இருந்தன. எப்பொழுதெல்லாம் வியாபாரம் குறைவு படுகிறதோ அப்போதெல்லாம் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூனை வானத்தில் பறக்க விடுவான்.  சிறுவர்கள் அதனை பார்த்ததும் தமக்கென்று ஒன்றை வாங்கி கொள்வர். இதனால் அவனது வியாபாரமும் மிகவும் உயர்வடைந்தது. இச்செயலை தொடர்ந்தும் அவன் செய்து கொண்டிருந்தான். ஒருநாள் கடலோரத்தில் நிறைய சிறுவர்கள் நின்று விளையாடுவதை பார்த்து அங்கே சென்று தனது கைப் பையினுள் இருந்து ஏதொன்றை இழுத்தான்.  "இந்த கறுப்பு நிற பலூனை ஊதி பறக்க விட்டாலும் இது அதிக தூரம் பறக்கும்" என கூறி ஹீலிய வாயு நிரம்பிய கறுப்பு பலூனை மேலே பறக்க விட்டான்.  அப்போது அங்கிருந்த சிறு பையன் தன் தகப்பனிடம் அப்பா எனக்கு அதை வாங்கி தாங்க என்று கேட்டான். தகப்பன் மகனிடம்" மகனே பலூன் மேலே பறப்பது, வெளியே என்ன தோற்றம் என்பதை பொறுத்தல்ல உள்ளே என்ன இருக்கின்றது என்பதை பொறுத்தே. கருத்து-  இதை போலவே எம் வாழ்விலும் "  எம் ...

இயேசுவை விசுவாசிப்போம் - Story

Image
ஓர் அழகான குடும்பத்தில் தகப்பன், தாய்,  மூன்று வயதான மகன் மற்றும் எட்டு மாத குழந்தையுமாக ஆறு மாடிகளை கொண்ட ஓர் பெரிய கட்டடத்தில் மூன்றாவது மாடியில் சந்தோசமாக வசித்து வந்தனர். ஒருநாள் தாய் வெளியே சென்றிருந்த சமயம் கட்டடம் திடீரென சூடாகுவதனை தகப்பனால் உணர முடிந்தது. கீழே விபரீதம் ஏதோ நடக்கின்றது என்பதை உணர்ந்த அவர் தொட்டிலில் இருந்த குழந்தையை தூக்கி கொண்டு "எனக்கு பின்னால் வா மகனே"  என மகனுக்கு கட்டளையிட்டு சீக்கிரமாய் வெளியேறினான் பின் தொடர்ந்த மகனுக்கு திடீரென தனக்கு மிகவும் பிடித்தமான ஓர் விளையாட்டு பொருள் ஞாபகம் வந்தது. அதனை எடுத்து கொண்டு வெளியே செல்வோம் என நினைத்து அறைக்குள் போய் அதனை தேடிக் கொண்டிருந்தான் ஆனால் தகப்பனோ   இதனை அறியவில்லை கீழே சென்று விட்டான்.  விளையாட்டு பொருளை எடுத்து கொண்டு வெளியே வந்த பையன், இறங்கும் பாதையில் தீ பரவி விட்டதை  பார்த்து "அப்பா அப்பா" என சத்தமாய் கூக்குரலிட்டான் கீழே இருந்த தந்தை சத்தமாய் மகனே நீ எங்கள் வீட்டின் யன்னல் வழியாய் கீழே குதி என கத்தினார். மகனோ அப்பா உங்களை எனக்கு தெரியவில்லை நீங்கள் எ...